ரஷ்ய விமானம் தொடர்பான விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஏரோஃப்ளோட் ரஷ்ய விமானம் தொடர்பான வழக்கில் இலங்கை நீதிமன்றத்தினால் மேலதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அது இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள ஒப்பந்தங்களுக்கு பாதகமாக அமையும்.
அத்துடன், அரசின் கொள்கைகளுக்கு இந்த வழக்கு முரண்பாடானதாக இருப்பதால் அதனை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று (28) கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நிறுவனம்
இந்த வழக்கின் வாதியான அயர்லாந்து நிறுவனம், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும், நீதிமன்றத்திற்கு உண்மைகளை மறைத்தும் விமானத்தை நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடை உத்தரவு பெற்றுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு கலைக்கப்பட்டுள்ளதால் வழக்கை தொடர முடியாது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
நீதிமன்றத்தினால் தடை நீக்கப்பட்ட போதிலும், விமானம் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாகவும், ஆனால் இதுவரை ரஷ்ய நிறுவனத்திற்கு சொந்தமான வேறு எந்த விமானமும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியவில்லை எனவும் பிரதிவாதி ஏரோஃப்ளோட்டின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கு சிறப்பு வழக்கு என்பதால் வரும் 5ம் திகதி விசாரணை துவங்கி, பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். அதன்படி, இந்த வழக்கு ஜூலை 05ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
