மத்தியதரைக்கடலில் மூழ்கிய ரஸ்ய கப்பல் - மீட்புப்பணிகளில் ஸ்பெயின்
ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான மத்தியதரைக் கடலில், சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதில், இரண்டு பணியாளர்கள் காணாமல் போனதாக ஸ்பெயினின் கடல்சார் மீட்பு நிறுவனம் மற்றும் ரஸ்ய வெளியுறவு அமைச்சகம் ஆகியன அறிவித்துள்ளன.
எனினும் பதினான்கு பேர் ஒரு உயிர்க்காக்கும் படகினால் மீட்கப்பட்டு ஸ்பெயினுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர அறையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து குறித்த கப்பல் மூழ்கத் தொடங்கியதாக ரஸ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் அதிகாரிகள்
எனினும் விபத்துக்கான காரணத்தை இன்னும் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட குறித்த பிரதேசத்துக்கு ரஸ்யாவின் போர்க்கப்பல் ஒன்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.