ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி உள்ளது.
அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவ தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வருகிற 7ஆம் திகதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஐநா சபை அதேநேரத்தில் தாங்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ரஷ்ய படைகளின் 251 டாங்கிகள், 939 கவச வாகனங்கள், 105 பீரங்கி அமைப்புகள், 18 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 33 விமானங்கள், 37 ஹெலிகொப்டர்கள், 404 வாகனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. 9,166 ரஷ்ய படை வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர்.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan