இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ரஷ்ய தூதுவர்!
இலங்கையில் முதலீடு செய்வதற்கான எவ்வித சூழ்நிலைகளும் இல்லை என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் லெவன் ஜகர்யான் (LEVAN S. DZHAGARYAN) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நான் அறிந்த வகையில் எவ்வித முதலீடுகளும் இல்லை. தனியார் முதலீடுகள் இருக்கலாம்.அது அவர்களுக்குரியதாகும்.
எங்கே முதலீடு செய்ய வேண்டும். எந்த செயற்றிடங்களும் நடைபெறுவதாக தெரியவில்லை. நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அரசிடம் திட்டங்கள் இல்லை
இங்கே திட்டங்கள் இல்லையே, எங்களுக்கு தெரிந்த நட்பு ரீதியிலான தூதுவர்கள் இலங்கையின் முதலீடு தொடர்பில் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கையில் இருக்கும் சில குழப்பங்களால் முதலீடு செய்வது இலகுவான காரியமல்ல.
முதலீடுகளும் இல்லை.திட்டங்களும் இல்லை.பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் எங்களிடம் சில ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக வழங்க முடியும்.
ஆனால் சம்பந்தப்படுத்துவதற்கான பிரச்சினை அரச தரப்பில் இருக்கிறது.மேலும் எமக்கு தடைகள் போடப்பட்டுள்ளன.அதை செயற்படுத்துவது இலகுவான காரியம் அல்ல. எமது நாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் எந்த திட்டங்களும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

அணுமின் நிலைய திட்டம் தொடர்பில் வலு சக்தி அமைச்சர் குமார் ஜயகொடியை சந்தித்த போது ரஷ்யாவின் அணுமின் ஏஜன்சி வழங்கிய கடிதம் தொடர்பில் வினவிய போது எவ்வித பதில்களும் இல்லை.
எங்களுக்கு இலங்கையில் எவ்வித முதலீடுகளும் வழங்கப்படவில்லை.மேலும் எவ்வித திட்டங்களும் இல்லை என குறிப்பிட்டார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam