ரஷ்ய விமானம் தடுப்பு விவகாரத்தால் ஏற்படபோகும் பொருளாதார சிக்கல்: சஜித் பகிரங்க எச்சரிக்கை
"விமானம் தடுத்துவைப்பு விவகாரத்தால் ரஷ்யாவுடன் வீண் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டு பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அரசின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஷ்ய விமானம் தடுப்பு விவகாரம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "ரஷ்யாவின் விமானமொன்று, வணிக நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை நான் விமர்சிக்க போவதில்லை. அதற்கான தார்மீக உரிமையும் எனக்குக் கிடையாது.
இருப்பினும், இந்த பிரச்சினை சர்வதேசம் வரை சென்று, இராஜதந்திர நெருக்கடியாக மாறுவதற்கு முன்னர் அதனை தீர்த்திருக்கலாம். ஆனால், தாங்கள்தான் சர்வதேச ஜாம்பவான்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் அதனை செய்யவில்லை.
எதிர்க்கட்சி தலைவரின் எச்சரிக்கை
ரஷ்யாவில் இருந்துதான் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அங்கிருந்து விமானம் வருவது தடைப்பட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியும் அந்த நாட்டில் தங்கியுள்ளது. எனவே, விமானம் தடுத்து வைப்பு விவகாரத்தால் எமது நாட்டுக்குத்தான் பிரச்சினை ஏற்படப்போகின்றது" என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ரஸ்யா - இலங்கை இடையே இராஜதந்திர உறவில் விரிசல் (Video)
|
ரஷ்யாவுடன் முறுகலை தவிர்க்க கடும் முயற்சியில் இலங்கை! |





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
