இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்க இரு ரஷ்ய நிறுவனங்கள் பதிவு
இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூரி நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக அழைக்கப்படும் விலை மனுக் கோரல்களைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டுக்காக கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல் ஒன்று திறக்கப்படவுள்ள நிலையில், அதற்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பு இந்த இரண்டு ரஷ்ய நிறுவனங்களுக்கும் கிடைக்கும் என்றும் மயூரி நெத்திகுமார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் உட்பட சுமார் 15 நிறுவனங்கள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan