வளைகுடாவில் அணு ஆயுத மோதல் அச்சம்.. சர்வதேசத்திற்கு ரஷ்யா ஏற்படுத்தும் அச்சம்
மத்திய கிழக்கில் அணு ஆயுத மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது என ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய மூத்த பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெத்வெதேவ் (Dmitry Medvedev) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் குறித்து அவர், ஈரானை எதிர்த்ததன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரும் மூலோபாய தவறை செய்துவிட்டார்; பிராந்தியத்தின் மிகப்பெரிய போர் இன்னும் வரக்கூடும் என்றார்.
அணு ஆயுத மோதல்
மேலும் பேசிய அவர், "ஈரானுடனான போர் மத்திய கிழக்கில் அணு ஆயுத மோதலைத் தூண்டும் அபாயம் உள்ளது.

வளைகுடா நாடுகள் இப்போது தங்களின் சொந்த 'அணு ஆயுதக் கவசத்தை' நாடக்கூடும் என்றும், இது ஒரு பரந்த மோதலுக்கான அபாயத்தை கடுமையாக அதிகரிக்கும்.
துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா தொடங்கியுள்ள இந்தத் தூண்டுதலற்ற மிகவும் ஆபத்தான போரின் விளைவாக, அங்கு ஒரு அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவும், இஸ்ரேலும் சீனக் கடையில் புகுந்த காளையைப் போல நடந்துகொண்டு, பிராந்தியத்தைப் பேரழிவை நோக்கித் தள்ளுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri