அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா: புடினின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சி தகவல்
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளதாகப் பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரஷ்யாவின் புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய வல்லமையைக் கொண்டது.
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என அவர் தெரிவித்ததை மேற்குலக நாடுகள் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் தயார் நிலையில் உள்ளமை தொடர்பான பிந்திய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய சாத்தான்-2 ஏவுகணையானது மணிக்கு 15,880 மைல் வேகத்தில் பயணித்து உரிய இலக்கைத் தாக்கக் கூடியதாகும்.
இந்நிலையில் மேற்படி ஏவுகணை எதிர்வரும் செப்டெம்பர் முதல் ஒக்டோபர் வரையான இலையுதிர் காலத்தில் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் இருக்கும் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
