மூன்றாம் உலக யுத்தம்? உக்ரைன் - ரஷ்ய எல்லையில் நடப்பது என்ன?
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைகளின் பின்னணிகள் பற்றி தற்பொழுது ஊடகப்பரப்பில் அதிக அளவில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் உக்ரேன் பற்றியும், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு வியூகங்கள் பற்றியும் பல வருடங்களாகவே 'உண்மையின் தரிசனம்' ஊடாக 'தமிழ்வின் பேசி' வருகின்றது.
ஐரோப்பாவின் உணவுக் கூடை (Europe's food basket) என்று அழைக்கப்பட்டுவந்த உக்ரேனை- சுமார் 4 மில்லியன் மக்களை கொலை செய்து ரஷ்யா எப்படி தன்னுடன் இணைத்துக்கொண்டது என்று உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளில் மிக மிக விரிவாக நாம் பார்த்திருந்தோம்.
அதேபோன்று உக்ரேனை மையப்படுத்தி கருங்கடலில் ரஷ்யா நகர்த்திவந்த காய்கள் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பாகவே 'உண்மையின் தரிசனம்' விரிவாகப் பேசியிருந்தது.
வரலாம் என்று எதிர்வுகூறப்படுகின்ற பயங்கர யுத்தத்தில் ரஷ்யா எப்படி எப்படியான ஆயுதங்களை பாவிக்கப் போகின்றது என்றுகூட ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழ்வின் விபரித்திருந்தது.
ரஷ்யாவைச் சுற்றிவளைக்கும் நேட்டோ படைகளின் நகர்வுகள், நேட்டோவைக்கு குறிவைத்து ரஷ்யா தயாரித்துள்ள 'சுனாமியை உருவாக்கும் ஆயுதம்'(Tsunami weapon) போன்றன உற்பட விரிவாக ஆராயப்பட்ட சில 'உண்மையின் தரிசனம்' ஆவணப்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
அடுத்த சில வாரங்கள் ஊடகங்களின் பிரதான பேசுபொருளாக இருக்கப்போகின்ற உக்ரேன் -ரஷ்ய பிரச்சனை பற்றிய சரியான புரிதலை நீங்கள் கொண்டிருக்கவேண்டுமானால், கீழே இணைக்கப்பட்டுள்ள 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சிகளை நேரம் ஒதுக்கிப் பாருங்கள்:
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam