இளம் வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய ஆளுங்கட்சி அரசியல்வாதி பிணையில் விடுதலை
கம்பளை- குருந்துவத்தை பிரதேசத்தில் இளம் வர்த்தகர் ஒருவரைத் தாக்கிய ஆளுங்கட்சியின் அரசியல்வாதியொருவர் இன்று(30.12.2025) நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை அருகே குருந்துவத்தை, அம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் வர்த்தகர் ஒருவர் தனது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.
கடந்த 28ஆம் திகதி மேற்படி சம்பவம் நடைபெற்றிருந்தது.
பிணை
கங்கஇஹல கோரளை பிரதேச சபையின் தலைவரான இந்திக உபுல் குணசேகர தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தாக்குதலுக்குள்ளான இளைஞர் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும் தாக்குதலுக்குள்ளான நபர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இன்று குருந்துவத்தை பொலிசில் சரணடைந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான கங்கஇஹல கோரளை பிரதேச சபைத் தலைவர் இந்திக உபுல் குணசேகர, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு எதிரான குற்றச்சாட்டு போலியானதும் சோடிக்கப்பட்டதுமான குற்றச்சாட்டு என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri