எந்தவொரு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் நாட்டின் ஆட்சியாளரே பொறுப்பு - திலும் அமுனுகம
நாட்டில் இடம்பெறும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் நாட்டின் ஆட்சியாளர்களே பொறுப்பு சொல்ல வேண்டுமென ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றாலும் அதன் பொறுப்பினை நாட்டின் ஆட்சியாளர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் நாட்டை ஆட்சி செய்தவரே அந்த தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும், படை வீரர்களிடம் விசாரணை நடாத்த இந்த அரசாங்கம் ஒரு போதும் அனுமதியளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.