அறிகுறிகள் தென்படாத கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நோய் அறிகுறி தென்படாத கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன (Rukshan Bellana) தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பாடசாலை மாணவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றாது ஏனைய தரங்களில் கற்கும் மாணவர்ளுக்கும் பாடசாலைகளை ஆரம்பிப்பது உசிதமானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு செய்வதனால் மீண்டும் கோவிட் பரவுகை ஏற்படக்கூடும். அண்மைய நாட்களில் கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கையில் சரிவு நிலை ஏற்பட்டிருந்த போதிலும், நோய் அறிகுறி தென்படாத தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆபத்தானது.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட போதிலும், பாடசாலை சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படாமையினால் சுகாதார வழிகாட்டல்களை கிரமப்படுத்தி அமுல்படுத்த வேண்டும்.
எழுமாறான அடிப்படையில் நாடு முழுவதிலும் கோவிட் பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



