தொடர் வெற்றிகளை பதிவு செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ்! புள்ளிப்பட்டியலில் முதலிடம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் அணிகள் மோதின.
ராஜஸ்தான் ரோயல்ஸ்
கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினர்.

சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ஓட்டங்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.
போட்டி முடிவில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் ஜெயஸ்வால் அதிகபட்சமாக 32 பந்துகளில் 77 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) குவித்தார். மும்பை சார்பில் கஸன்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டு்ககளையும் வீழ்த்தினர்.
மும்பை இந்தியன்ஸ் அணி
இதைத் தொடர்ந்து 11 ஓவர்களில் 151 ஓட்டங்களை இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரியான் ரிக்கிள்டன் மற்றும் ரோகித் சர்மா முறையே 8 மற்றும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கியவர்களில் திலக் வர்மா (14), ஹர்திக் பாண்டியா (9) என ஆட்டமிழந்தனர். ரூதர்ஃபோர்டு 8 பந்துகளில் 25 ஓட்டங்கள் (2 பவுண்டரிகள், 2 சிக்சர்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவருடன் ஆடிய நமன் திர் 13 பந்தகளில் 25 ஓட்டங்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களை எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் ஷர்மா, நேன்ட்ரி பர்கர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் துஷார் தேஷ்பான்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.