நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டப்பட்டது..
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16) சிறப்பாக இடம்பெற்றது.
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டது.
தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் நல்லூரன் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும் திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.