அனுரகுமார இரட்டை நிலைப்பாட்டை கொண்டவர்: ரோகித்த குற்றச்சாட்டு
ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இரட்டை நிலைப்பாட்டை கொண்டவர் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுனவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர் ஒருவரிடம், ‘இந்த ஆடை வாங்க பணம் எங்கிருந்து‘ என கேட்டால் ‘அது ஒரு சகோதரர் தமக்கு அன்பளிப்பாக வழங்கியது என கூறுவார்கள்‘ எனவும் தாம் அண்மையில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு விஜயம் மேற்கொண்ட போது வர்த்தக வகுப்பில் பயணம் செய்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி. தலைவர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு பல நகரங்களில் கூட்டங்களை நடத்தியிருந்தார்.

மோசமான அழிவுகள்
மேலும் அங்கு, இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி அனுரகுமார விளக்கமளித்தார் எனவும் இந்த நாட்டுக்கு பாரியளவு பொருளாதார அழிவினை ஜே.வி.பினர் கடந்த காலங்களில் ஏற்படுத்தியதாக ரோகித அபேகுனவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கும் சொத்துக்களுக்கும் ஜே.வி.பி. கடந்த காலங்களில் மோசமான அழிவுகளை ஏற்படுத்திவிட்டு, தற்பொழுது பொருளாதார அழிவுகள் பற்றி பிரச்சாரம் செய்து வருவதாக அவர் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்