இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth ) அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தினை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதார மீட்சி
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ரொபர்ட், அரச அதிகாரிகள், நிதித்துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
We look forward to welcoming @USTreasury's Deputy Assistant Secretary Robert Kaproth back to Sri Lanka next week to meet with government officials, think tanks, and financial sector leaders. DAS Kaproth’s visit underscores U.S. commitment to supporting Sri Lanka during this…
— Ambassador Julie Chung (@USAmbSL) June 28, 2024
ரொபர்ட் கப்ரோத்தின் விஜயம் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்புறவையும் ஆதரவையும் எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பொருளாதாரம், நிதித் துறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் ஆழமான சீர்திருத்தங்கள் இன்றியமையாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |