கைவிலங்குடன் தப்பியோடிய கொள்ளையர்கள்-நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்
கொஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்தப்படவிருந்த சுட்டியா மற்றும் சுடிய என அழைக்கப்படும் இரண்டு கொள்ளையர்கள் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள்
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பிலியந்தலை நகரில் லொத்தர் விற்பனை செய்யும் குடிலில் 7 ஆயிரம் ரூபா கொள்ளையிட்டமை உட்பட சில கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இந்த நபர்கள் விஸ்வகலாவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்துவதற்காக கெஸ்பேவ நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் காவலரணில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களை அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், பணி அவசியம் காரணமாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற சந்தர்ப்பத்தில் ஏனைய பொலிஸாருக்கு தெரியாமல் இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகஸ்தர், கொள்ளையர்களை பார்த்துக்கொள்ளுமாறு காவலரணில் இருந்து ஏனைய பொலிஸாரிடம் கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து சென்றிருந்தார்.
முச்சக்கர வண்டியில் ஏறி தப்பியோட்டம்
கையில் போடப்பட்டிருந்த கைவிலங்கு வெளியில் தெரியாதபடி துணி ஒன்றில் மூடி மறைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் பிரதான வாயில் ஊடாக ஹொரணை -கொழும்பு பிரதான வீதிக்கு சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது நீதிமன்ற பொலிஸ் காவலரணில் ஒரு சார்ஜன்ட், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்ற வாயிலில் கடமையில் இருந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பிச் சென்ற கொள்ளையர்களை கைது செய்வதற்காக சிறப்பு பொலிஸ் அணியும் புலனாய்வு அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
