யாழில் இடம்பெற்ற வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண பிரதம செயலகம் மற்றும் வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து திணைக்களத்தின் எற்பாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நடைபவனியானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் தலைமையில் இன்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இந்த நடைபவனி வேம்படிச் சந்தியிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து சத்திரச் சந்தியில் நிறைவடைந்துள்ளது.
செயற்றிட்டம்
இந்த செயற்றிட்டத்தினை தொடர்ந்து வீதிபாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றல் தொடர்பில் வாகனச்சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், வாகன பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் பொஸில் நிலைய போக்குவரத்து பிரதான பரிதோதகர் உள்ளிட்ட மோட்டார் திணைக்கள அலுவலகர்கள், பணிநிலை உத்தியோகத்தர்கள், பொஸில் மோட்டார் சைக்கிள் உத்தியோகத்தர்கள், சமூகவியாளர்கள், கல்வியாளர்கள்,சுகாதாரத்துறையினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜி