கோவிட் தொற்று உறுதியானவர்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து
கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதாக நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மதில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.
அதாவது ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளான காலப்பகுதியில் இருந்து 3 - 6 மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதிக்குள் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோவிட் தொற்றுக்குள்ளானோர் 6 மாதங்களின் பின்னர் குருதியில் உள்ள சீனியின் அளவினை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளர்களை குடும்ப உறுப்பினர்களாக கொண்டிராதவர்கள், ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் மற்றும் இளம் வயதினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்தியர் மதில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
