முகக்கவசத்தின் மூலம் கோவிட் பரவும் ஆபத்து
கோவிட் வைரசில் இருந்து தப்பிக்கக் கட்டாயம் அணிய வேண்டிய முகக்கவசத்தின் மூலம் கோவிட் பரவும் ஆபத்து காணப்படுவதாகக் கலாநிதி அஜந்தா பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகள் மாத்திரமல்லாது தனிமைப்பட்ட ரீதியில் பயன்படுத்தும் முகக்கவசம், பாதுகாப்பு உடைகள் மற்றும் கையுறைகளை அழிக்கச் சரியான நடைமுறை இல்லை என்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் சுற்றாடலில் வீசப்படுவதால், கோவிட் வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பயன்படுத்தும் முகக்கவசங்களை எரிக்க வேண்டும் அல்லது தொற்று நீக்கியைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் அல்லது வீசுவதற்கு முன்னர் சூடான தண்ணீரில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவற்றில் மிகவும் சிறந்த முறை பயன்படுத்தும் முகக்கவசங்களை எரியூட்டுவதாகும் எனவும் அஜந்தா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.