இலங்கை திவாலாகும் ஆபத்து? சிங்கள ஊடகம் தகவல்
2022ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இலங்கை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சர்வதேசப் பத்திரங்கள் உட்பட தவணைகளில் 1.5 பில்லியன் டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட உள்ளதே இதற்குக் காரணம். இந்த பணத்தை செலுத்துவதற்கான திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த காலத்திற்குள் பணத்தை செலுத்தாவிட்டால் இலங்கை திவாலாகும் அபாயம் உள்ளது.
சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிலையங்கள் ஏற்கனவே இலங்கையை திவால்நிலைக்கு அருகில் பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam
