கென்யாவில் அதிகரிக்கும் பதற்றம் : இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
கென்யாவில் (Kenya) வரி உயர்வை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களை (India) பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் சில இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளதுடன், நேற்று முன்தினம் கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் “கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வராமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |