உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது - லசந்த அழகியவன்ன
இலங்கையில் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha alakiyavanna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,
உலக சந்தை விலை உயர்வால் எரிவாயு விலையை திருத்த வேண்டிய கட்டாயம் அரசங்கத்துக்கு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு தற்போது 800 டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இது எதிர்காலத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலை உயர்வின் மீது அரசாங்கத்துக்கு அதனை கட்டுப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.