அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலைகள்
எதிர்வரும் மே மாதம் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 195 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 700 ரூபாவிலும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 650 ரூபாவிலும் அதிகரிக்க அந்த நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளன.
எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால், தமது நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை தற்போது சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று ஆயிரத்து 493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
