உக்ரைனுக்கு உதவும் பிரித்தானியா: ரிஷி சுனக் உறுதி
உக்ரைனுக்கு புதிய வான் பாதுகாப்பு பொதிகளை வழங்கவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இன்று நேரில் சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளின் பாதுகாப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உதவி
இதற்கமைய உக்ரைனுக்கு 50 மில்லியன் பவுண்டுகள் ($59.4m)வான் பாதுகாப்புப் பொதியை வழங்குவதாகவும் இதில் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் ஈரான் வழங்கும் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்று விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ரேடார் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு உபகரணங்கள் உட்பட புதிய வான் பாதுகாப்பை வழங்குகிறோம்.
மேலும் கடினமான குளிர்காலத்திற்கு மனிதாபிமான ஆதரவை முடுக்கி விடுகிறோம் என்றும் சுனக் தெரிவித்துள்ளார்.