வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாரா ரிஷாத்? கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் வைத்தியர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரை திட்டியதாகவும், அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும், புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ரிஷாத் கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதுடன், மரண அச்சுறுத்தல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தாக ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
