வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Suresh Premachandran Government Of Sri Lanka
By Thileepan Apr 06, 2023 12:07 AM GMT
Report

அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவது தொடர்பில் ஈபி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

13 ஆம் திருத்தசட்டம் நிறைவேற்றம்

ஜனநாயக அமைப்புக்கள் அனைத்தும் இன்று முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என கூறினாலும் கூட இதுவரை அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை.

இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி மிக தெளிவாக கூறியுள்ளது.

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | Rights Of Tamil Pepole Should Be Protected

தமிழ் மக்கள் சார்பாகவும் பல கட்சிகளும் எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டதோ அதில் உள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என கோரியிருக்கின்றார்கள்.

அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவிலும் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தினையும் எடுத்துள்ளோம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலையாவது அரசாங்கம் உடன் நடாத்த வேண்டும் எனவும் கோருவதாக அந்த தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.

தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சின்னங்கள்

அடுத்ததாக வெடுக்குநாறிமலை, குறுந்தூர்மலை, கன்னியா வென்னீர் ஊற்றுப்பகுதிகளான தமிழ் மக்களின் புராதன சின்னங்கள் இன்று பறிக்கப்பட்டுள்ளதுடன் வெடுக்குநாறி மலையில் உள்ள விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டுள்ளதுடன் குருந்தூர் மலையில் புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | Rights Of Tamil Pepole Should Be Protected

கன்னியா தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்களுக்கான மேய்ச்சல் தரையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இவை அனைத்தும் அரசாங்கத்தால் உடனடியாக நிறுத்தப்பட்டு இவை அனைத்தும் இந்து தமிழ் மக்களின் புராதன இடங்கள் அந்த மக்கள் தொடர்ந்தும் வழிபடக்கூடியவாறாக உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் இதனை தொல்பொருள் பகுதியாக எடுக்குமாக இருந்தால் அதனை புராதன சின்னமாக பாதுகாக்க வேண்டுமே தவிர அங்கு புத்த விகாரைகள் வருவதோ சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதோ ஏற்புடையதல்ல.

அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்தி மீண்டும் தமிழ் மக்களிடம் இந்த ஸ்தாபனங்கள் வழங்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | Rights Of Tamil Pepole Should Be Protected

அரசாங்கம் வெளிநாடுகளுக்கும் தூதுவராலயங்களுக்கும் தாம் நல்லிணக்க செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம் என கூறும் அதேவேளை நல்லிணக்கத்திற்கு எதிரான வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாகவே இருக்கின்றது எனவும் மத்தியகுழுவில் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆகவே அரசாங்கம் வெளிநாடுகளுக்கு ஒரு கதையையும் உள்நாட்டில் வேறு விதமாக செயற்படுவதையும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கண்டிப்பதோடு வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா வென்னீர் ஊற்று அனைத்தும் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி விரும்பினால் ஓர் இரவிலேயே அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டு வர முடியும். ஆகவே நாட்களை கடத்தாமல் ஜனாதிபதி அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

வெளிநாடுகளின் உதவியுடன் தமிழர்கள் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தல் | Rights Of Tamil Pepole Should Be Protected

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் அதனை எவ்வாறு மேலும் தீவிரமாக முன்னெடுத்து சென்று அனைவரதும் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய ஸ்தாபனமாக மாற்றுவது தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் மத்தியகுழுவில் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US