இரண்டு வாரங்களுக்கு மட்டுமே அரிசி கையிருப்பு:அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்
இரண்டு வாரங்களுக்கு போதுமானளவு மட்டுமே அரிசி கையிருப்பில் உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய நிலையில் போதியளவு நெல் கிடைக்காமையினால் பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி கையிருப்பில் இல்லை
கடந்த போகத்தில் நெல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமை, சிறுபோக பயிர்ச்செய்கைக்கான பசளை தட்டுப்பாடு என்பனவே இவ்வாறான நிலை ஏற்படக் காரணமாகும்.
அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினரின் அச்சம்
எதிர்வரும் நாட்களில் அரிசி ஏற்றிக் கொண்டு லொறிகள் பாதையில் செல்லவும் முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் பஞ்சத்தில் இருக்கும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அடித்து பறித்துக்கொண்டு சென்று விடுவார்கள் என்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மறுபுறத்தில் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் வங்கிகளில் பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பி செலுத்த வழியின்றி, வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை திருப்பி ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.





திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
