யாழில் சமுர்த்தி பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்: யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை

Jaffna Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 10, 2022 08:18 AM GMT
Report

 யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை இன்று(10) காலை யாழ். அரச அதிபருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிவைத்துள்ளார்.

யார்  சமுர்த்தி பயனாளிகள்?

யாழ். அரச அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், "தமது வாகனங்களுக்கான எரிபொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் வீடுகளில் பதுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்ள நிலையில், ஒரு றாத்தல் பாண் வாங்க முடியாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகாக உள்வாங்கப்படாமல் உள்ளனர் என்ற வேறுபாட்டையும் அவர் விவரித்துள்ளார்.

யாழில் சமுர்த்தி பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்: யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை | Review Samurdhi Visito Jaffna Request

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் 70 வீதமானவர்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்ற குடும்பங்கள் என, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பொது வெளியில் குறிப்பிட்டுள்ள கருத்தையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் வறுமை ஒழிப்பு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 78,441 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட குடும்பங்களில் ஆயிரக்கணக்கானோர் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, ஏறக்குறைய 15 வருடங்களாக சமுர்த்தி பயனாளிகளாக உள்ளனர்.

யாழில் சமுர்த்தி பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்: யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை | Review Samurdhi Visito Jaffna Request

மேற்படி மொத்த சமுர்த்தி குடும்பங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதை விட உயர் வருமானம் பெறும் குடும்பங்களாவர். நூற்றுக்கணக்கானோர் கூலியாட்களை வைத்து தொழில்களை நடத்தும் முதலாளிகளாவர். பலர் வாகனங்களை வைத்து தினசரி பல்லாயிரம் ரூபாய்களை உழைப்பவர்கள். ஆனால், பல அப்பாவிகள், கூலித் தொழில் செய்யும் குடும்பங்கள் சமுர்த்திக் கொடுப்பனவுகள் இன்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான பாரிய வேறுபாடுகளுக்கு மத்தியில் தான் யாழ்.மாவட்ட அரச நிர்வாகம் மக்களுக்கான பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றது என்பது வேதனையான விடயம். இந்த தகவல்கள் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வேதனையானது. அதுவும் சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு 70 வீதம் பிழையானது எனத் தெரிந்திருந்தும் அது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்.

 சமுர்த்தி ஆணையாளர் 

யாழில் சமுர்த்தி பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்: யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை | Review Samurdhi Visito Jaffna Request

யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் அண்மையில் பொது வெளியில் கருத்துக் கூறும்போது, 'யாழ்.பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி சமுர்த்தி பெறும் 70 வீதமான குடும்பங்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்றவர்கள்' என வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு தகுதியற்ற குடும்பங்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி திட்டங்கள் சென்றுகொண்டிருப்பதை யாழ். மாவட்ட அரச நிர்வாகம் பார்த்துக்கொண்டிருப்பது அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதியாகும்.

நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற தற்போதைய சூழலில், வறுமை ஒழிப்பு என்ற பட்டியலில் உள்ள சமுர்த்திக் குடும்பங்களுக்கே தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படுகின்றன. சமுர்த்திக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுப்பனவு பெறத் தகுதியற்றவர்கள் 7500 ரூபா பெற்றுக்கொள்கின்ற அதேநேரம், முற்றிலும் தகுதியுடைய, அதி வறுமைக் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியல் என்ற பெயரில் வெறும் 5000 ரூபாவை பெற்றுக்கொள்கின்றனர். இந்த வேறுபாடு களையப்பட வேண்டும்.

பொதுவான கொள்கைகள்

யாழில் சமுர்த்தி பயனாளிகளை உடன் மீளாய்வு செய்யுங்கள்: யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை | Review Samurdhi Visito Jaffna Request

எனவே, யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாவட்டத்திற்கு என பொதுவான கொள்கையின்படி அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு இடம்பெறவேண்டும்.

1. வீடுகளில் உழைக்கும் வயதுடைய நபர்கள்.

2. வீடுகளில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை

3. தொழில்களின் நிலமை, குடும்ப வருமானம்.

4. குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அங்கத்தவர்களின் நோய் நிலமை

5. விதவைகள், கைவிடப்பட்டோர், அங்கவீனர்கள்.

6. போர்ப் பாதிப்பிற்கு உட்பட்டவர்கள்

இவ்வாறு யாழ். மாவட்டத்திற்கு என பொதுவான கொள்கையை வகுத்து, அதன்படி யாழ்.மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் கூறியதைப்போன்று, தகுதியற்ற 70 வீதமான குடும்பங்களையும் நீக்கி, வறுமையில் வாடுகின்ற குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்.

மிக விரைவாக இத்திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மையடைவர். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அதுபோல, அநீதி செய்வோருக்கும், அநீதிக்கு துணை போவோருக்கும் அறம் கூற்றாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US