சஜித்தும் ரணிலும் தேவையில்லை! அரியநேத்திரனுக்கு வாக்களிப்போம்: அருட்தந்தை ஜோசப்மேரி
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளர் எனவும் வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது எனவும் மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் தமிழர்கள் அழிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனை வெளியுலகுக்கு கொண்டுசெல்லவேண்டும்.
நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் எமது பிரச்சினையை கொண்டு செல்லமுடியாது.
அதனால் பொது வேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இது நல்ல சந்தர்ப்பம். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என அவர் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
