இலங்கையில் வரி வலையில் சிக்காமல் தப்பிக்கும் மக்கள் - அரசு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் சுமார் 40 சதவீத மக்கள் இன்னும் வரி வலையில் சிக்கவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு எவ்வளவு பணத்தை இழக்கும் என்பது குறித்து எந்த மதிப்பீடும் இல்லை என அதன் ஊடகப் பேச்சாளர் நந்தன குமார கூறினார்.
உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு
வரி செலுத்துவோர்
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு வரிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரி வாரம் 6-ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளனர்.
மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.