சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற அதிகாரி கைது! பெருந்தொகை அபராதம் விதிப்பு
மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்து வந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித்திணைக்களத்தின் மதுவரிப்பரிசோதகர் காண்டீபன் தலைமையிலான குழுவினர் நாவற்குடா,அம்பாள் வீதியில் தீடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது வீடு ஒன்றில் நுட்பமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் 1600 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவசாய திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் குறித்த நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதனால் அவருக்கு 26000ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதி: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri