நடந்து முடிந்த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
நேற்றுடன் நிறைவடைந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சை பெபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்த 2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, மார்ச் முதலாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர்.
பரீட்சைக்கு தோற்றியவர்களில் 56 பேர் கொரோனாத் தொற்றுக் காரணமாக, 40 விசேட மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதியிருந்தமையுடன் தனிமைப்படுத்தப்பட்ட 322 பேர் பரீட்சை மத்திய நிலையத்தில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வகுப்புக்களில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
க.பொ.த. சாதாரணத்தர பரீட்சையின் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியடப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சர், க.பொ.த. உயர் தரப் பிரிவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சேர்க்கப்படுவார்கள்.
அதற்குரிய நடவடிக்கைகளை மிகவும் விரைவாக எமது அமைச்சு எடுக்கும் என்றார்.