மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு? வெளியான தகவல்
மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று காத்திருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக வைகோவால் முன்பை போல் இப்போது பயணம் செய்யவோ கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவோ முடிவதில்லை.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது உடல் தளர்ந்துள்ளதால் தந்தையின் இடத்தில் நின்று கட்சிப் பணிகளைக் கவனித்து வருகிறார் துரை வைகோ.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று வாக்குச் சேகரித்தார் துரை வைகோ.
இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் தொகுதியில் தனிக் கவனம் செலுத்தி அந்த தொகுதியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து வெற்றியும் பெற வைத்தார்.
இதனால் மதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வைகோவின் மகனான துரை வைகோவைக் களத்தில் இறக்கத் தயாராகிவிட்டார்கள் புரட்சிப் புயலின் தம்பிமார்கள்
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri