சாதாரண தரம் கற்காதவர்களுக்கு அரச தொழில் வழங்க தீர்மானம் எடுத்த ஒரேயொரு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
இலங்கை அரசியல் வரலாற்றில் சாதாரண தரம் கற்காத ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்பினை வழங்குவதற்குத் தீர்மானம் எடுத்த ஒரேயொரு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லினை மிகக் குறைந்த விலையில் கொள்ளையடிக்கும் நிலைமையினை இல்லாமல் செய்ய அரசாங்கம் அனைத்து நெல்லையும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய களஞ்சிய சாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு கள்ளியங்காடு களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுச் செயற்படாமலிருந்த இந்த கட்டிடம் ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்கீழ் இந்த களஞ்சிய சாலை புனரமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து அபிவிருத்தி மேற்கொண்டு செழிப்பான நாட்டினை உருவாக்கும் செயற்றிட்டத்திற்கு அமைவாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது களஞ்சிய சாலையினை அமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் நெல் கொள்வனவினையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் களஞ்சியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றிணையும் நட்டதுடன், களஞ்சிய சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.














யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
