இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்ய தீர்மானம்: அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரில் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இரத்து செய்ய தீர்மானித்துள்ளார்.
மேலும், இடைக்கால குழுவை நியமிக்கும் தீர்மானத்தை இரத்து செய்யும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக அவர் தனது "எக்ஸ்" தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் தடை
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Today, I signed a gazette to revoke the decision appointing an interim committee for Sri Lanka Cricket, aiming to lift our ICC suspension. I've also written to the ICC, seeking their observations on the Auditor General's report on SLC, and to the AG dept for future actions.
— Harin Fernando (@fernandoharin) December 12, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |