முக்கிய 3 அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாயவின் நிலைப்பாடு
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை தங்கள் அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு தனக்கு எவ்வித அவசியமும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாற்று கருத்தை கொண்டிருப்பதற்காக மாத்திரமே் அவர்களை நீக்கும் எண்ணம் தனக்கு இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக பதவி விலகி அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்ததெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியு்ளளார்.
கடந்த பிரேமதாஸ அரசாங்கத்தின் போது கூட்டுப் பொறுப்பை மீறியமை தொடர்பில் லலித் எத்துல்முதலி மற்றும் ஜீ.எம்.பிரேமசந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்னாண்டோ தீர்ப்பு வழங்கியதையும் ஜனாதிபதி இதன் போது நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




