பட்டிப்பொங்கலில் கோமாதா வதைக்கு எதிராக தீர்மானம் - டக்ளஸ் தேவானந்தா

Government Douglas Devananda Mahinda Rajapaksa Animal Slaughter
By Independent Writer Jan 15, 2022 05:19 PM GMT
Report

மிருகவதை செய்யப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda), பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவம் - 2022 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பட்டிப் பொங்கல் தினமான இன்று(15) யாழ். சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

என்னைப் பொறுத்தவரையில் மிருகவதை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக எனது நிலைப்பாடடினை வெளிப்படுத்தி வருகின்றேன்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் தமிழர் தரப்புக்கள் சில அரசியல் நோக்கங்களுக்காக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டன.

எனினும், மிருகங்கள் சித்திரவதை செய்யப்படக்கூடாது என்பதில் நான் உறுதியான கருத்தினையே அன்றும் வெளியிட்டிருந்தேன். இந்நிலையிலேயே பசு மற்றும் இடப வதைக்கு எதிரான சட்டத்தினை கொண்டு வருவதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆர்வம் செலுத்தி வருகின்றார்.

அத்துடன் அந்த நிலைப்பாட்டிலேயே தற்போதைய அரசாங்மும் இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய உங்களின் தீர்மானம் அமைந்திருக்கின்றது.

உங்களின் எதிர்பார்ப்புக்களை அடுத்த அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, குறித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

இதன்போது, பசு மற்றும் இடப வதையைக் கட்டுப்படுத்துவதற்காகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கான நினைவுச் சின்னம் ஒன்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US