பீ.சீ.ஆர் பரிசோதனை குறித்த உண்மையை தெளிவுபடுத்துமாறு ஐ.தே.க அரசாங்கத்திடம் கோரிக்கை
பீ.சீ.ஆர் பரிசோதனை தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்துவதற்கான சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையை அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்துவதில் சிக்கல்கள் நிலவும் என வெளியிடப்பட்டு தகவல்களில் உண்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடத்தப்பட்டு வரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்துவதற்கு கைவசம் உள்ள சாதனங்களின் எண்ணிக்கை விபரங்களையும் அரசாங்கம் வெளிப்படுது;த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
