வறிய மக்களுக்காக அமைச்சர் தினேஸ் குணவர்தன அரசாங்கத்திடம் கோரிக்கை
குறைந்த வருமானம் ஈட்டுவோர் அத்தியாவசிய உணவு பொருட்கள் பெற்றுக் கொள்வதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென அமைச்சர் தினேஸ் குணவர்தன கோரியுள்ளார்.
வறிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கம் உறுதிமொழி ஒன்றை வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பிலான கோரிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் தாம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏனைய மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறந்த முகாமைத்துவத்துடன் கூடிய நிர்வாகமொன்று அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
