கந்தகாடு சம்பவம்: பொலிஸார் முன்வைத்த கோரிக்கை
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 44 பேர் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 700க்கும் அதிகமான கைதிகள் முகாமை விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
தப்பிச் சென்றவர்களில் தற்போதைக்கு 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 272 பேர் தொடர்ந்தும் புனர்வாழ்வு முகாமில் தங்கியிருந்துள்ளனர்.
அமைதியின்மை
தப்பிச் சென்றவர்களில் இன்னும் 44 பேர் பற்றிய எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கை
அவர்கள் தங்கள் உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளில் தலைமறைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனவே அவர்களை கந்தகாடு புனர்வாழ்வு முகாம் அல்லது வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.