எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, வர்த்தக வாகனங்களுக்கான வருடாந்த வருவாய் உரிமக் கட்டணத்தை குறைக்க வேண்டும், அத்துடன் ஆடம்பர வாகனங்கள் மீதான வருடாந்த வருவாய் உரிமக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னர் அனைத்து போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளதால், எரிபொருள் விலை அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு அதிகரித்திருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தக வாகனங்களான பேருந்துகள், பாரவூர்திகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் வருடாந்த வருவாய் உரிமக் கட்டணகள், சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே அதன் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்.
ஆடம்பர வாகனங்களின் ஆண்டு வருவாய் உரிமக் கட்டணத்தை குறைந்தபட்சம் 50ஆயிரம் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிப்பதன் மூலம், வர்த்தக வாகனங்களின் உரிமக் கட்டண குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.
குறைந்த செலவில் தொடரூந்து சேவையை உருவாக்கி அதனை பொருட்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri