எல்லே குணவங்ச தேரர் மற்றும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற நடத்தும் வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு எல்லே குணவங்க தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு தர்ம நிறுவனத்தில் நேற்று கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கோவிட் தொற்று நோய் காரணமாக மிகப் பெரிய சிக்கலுக்கு எமது மக்கள் விழுந்துள்ளனர்.
பெரும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ள நேரத்தில் ஏன் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசரம் என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தின் வெளிப்படைதன்மை குறித்த சந்தேகம் எமக்கு ஏற்படுகிறது.
நாட்டின் வளங்களை மற்றவர்களுக்கு வழங்கும் முன்னர் அது குறித்து மக்களிடம் கேட்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றே வாசிக்கப்பட்டது. அப்படி இருக்கும் போது ஏன் அவசரமாக வாக்கெடுப்பை நடத்துகின்றனர்?.
இந்த வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு மக்கள் சார்பாக கோரிக்கை விடுப்பதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
