யாழ்.மக்களுக்கு ஐபிசி தமிழ் உறவுப்பாலத்தின் அழைப்பு
நாட்டில் மிகுந்த துயர் தந்த இயற்கைப்பேரிடரால் அல்லலுறும் மலையக மக்களை நோக்கி நிவாரணப்பணிகளுக்காக ஐபிசி தமிழின் உறவுப்பாலம் அழைப்பு விடுத்துள்ளது.
மண்சரிவால் இயல்பிழந்து வீடுகள் அழிவுற்ற குழந்தைகளுக்காகன கற்றல் உபகரணங்கள் சேகரிப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஐபிசி தமிழ் காரியாலயத்தில்
இந்த நிவாரணப் பணிகளுக்காக இல 10 பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் ( வேம்படிச்சந்திக்கு அருகில் ) என்ற முகவரியில் ஒப்படைத்து மலையகச்சிறார்களின் மீள் கல்விச்செயற்பாடுகளில் கரம்கொடுக்க உங்களையும் ஐபிசி தமிழின் உறவுப்பால அன்புடன் அழைத்து நிற்கின்றது.

பெருங்கனவுகளை தொலைத்து அநாதரவாக நிற்கும் நம் மலையகச் சொந்தங்களுக்கு உதவக்கரம் கொடுப்போம்.
எனவே இப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐபிசி தமிழ் காரியாலயத்தில் நேரடியாகவோ நன்கொடைகளாகவோ கையளிக்கமுடியும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெற +94 77 137 7306 என்ற whattappp இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

