அரசாங்கம் மீளப் பெற்றுக்கொண்ட வழக்குகள் குறித்து சஜித் தரப்பு அறிக்கை கோரல்
அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கை கோரியுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததன் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பலரின் வழக்குகளை தற்போதைய சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வழக்குகள் வாபஸ் பெற்றுக் கொண்டமைக்கான ஏதுக்களை தெளிவுபடுத்துமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் சட்ட மா அதிபரும், தற்போதைய பிரதம நீதியரசர் அப்போது தொடுத்த வழக்குகளை தற்போதைய சட்ட மா அதிபர் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் நேற்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan