பாடசாலை மாணவர்களின் பரிதாப நிலை - கல்வியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் 7ஆம் அல்லது 8ஆம் வகுப்பு மாணவரின் பாடசாலை பையின் எடை சுமார் 6 கிலோவாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மதிய உணவுப் பெட்டி மற்றும் தண்ணீர் போத்தல் இல்லாமல் இந்தளவில் எடை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் நடந்து, பேருந்துகள் மற்றும் ரயில்களில் பாடசாலைகளுக்கு செல்வதால் அவர்களுக்கு உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கல்வி அதிகாரிகள்
இந்த நிலையில் பாடசாலை கல்வியில் அதிக கவனம் செலுத்தவும் மாற்றங்களுக்காகவும், பாடசாலை பாடப்புத்தகங்களை 8 அல்லது 7 தினசரி பாடப்பிரிவுகளாக கட்டுப்படுத்தவும், பாட நேரத்தை 45 முதல் 50 நிமிடங்களாக அதிகரிக்கவும் கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இன்று, 45 நிமிட காலப்பகுதி கூட சில மாணவர்கள் பாட விதானத்தில் கவனம் செலுத்துவது கடினமாக்குகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், 10 நிமிடங்கள் மேலதிகமாக அதிகரிப்பது பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.
எனவே, எதிர்காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களிலும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத முடிவுகளை எடுப்பது நல்லதென கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
