தமிழ் அகதிகளை விடுவிக்குமாறு அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் Karen Andrews பொறுப்பேற்றுள்ள நிலையில், இது அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான நல்ல வாய்ப்பு என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இது புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews தனது புதிய பொறுப்பைக் கருணையுடன் தொடங்குவதற்கான நேரமாகும். அத்துடன், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் உள்ள தமிழ் அகதி குடும்பத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையை புதிய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனவமு் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எந்த நாட்டின் குடியுரிமைக் கொண்டவர்? விசா நிலை என்ன? என்பதையெல்லாம் கடந்து அனைத்து அகதிகளுக்கும், தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் Omar Khorshid தெரிவித்துள்ளார்.
தஞ்சக்கோரிக்கையாளர்களையும், அகதிகளையும் தடுத்து வைத்திருப்பது அவுஸ்திரேலியர்களின் வரிப்பணத்தை பெருமளவில் செலவழிக்கச் செய்கின்றது. அதே சமயம்,மனநல மருத்துவத்தைப் பெறுவதற்கான வழிகள் மிகவும் குறைவாக உள்ளதால் அதனால் ஏற்படும் தீங்கும் மேலும் மோசமான உடல் நலப் பாதிப்புகளை (அகதிகளுக்கு)ஏற்படுத்தும். இதை பொருளாதார மற்றும் கொள்கை ரீதியிலான பார்வையில் கண்டாலும் இந்த அணுகுமுறை சரியானதாக இருக்காது, எனவும் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கம் அவுஸ்திரேலிய அரசுக்கு சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளன.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 49 நிமிடங்கள் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
