காணி மற்றும் வீட்டு உறுதிப் பத்திரங்கள் பெறவுள்ளவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவிப்பு
இலங்கையில் எதிர்காலத்தில் காணி மற்றும் வீட்டு உறுதிப் பத்திரங்கள் மற்றும் டைட்டில் ரிப்போர்ட் என்ற அவற்றின் உரிமை அறிக்கைகள் என்பன, இணையங்களில் கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவாளர் நாயக திணைக்களத்தின் ஊடாக, இணையங்களில் கிடைக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இது இருக்கும்.
இலங்கையர்களும் விரைவில் தங்கள் உறுதிப் பத்திரங்கள் மற்றும் உரிமை அறிக்கைகளின் நகல்களை, இணையங்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் திணைக்களத்தின், இந்த திட்டம் 2021, ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைமுறைக்கு வந்துள்ளதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் சான்றிதழ்களை ஸ்பீட் போஸ்ட் என்ற விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்திலோ சேகரிக்கலாம்.
பொதுமக்கள் https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய இணைப்பைப் பயன்படுத்தி சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறையைப் பின்பற்றலாம்.
இதேவேளை பொது அதிகாரப்பூர்வ இணையதளம் www.rgd.gov.lk மூலமாகவோ அல்லது 011 288 9518 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெறலாம் என்று பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam