யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் உயிரிழப்பு
யாழ். பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் இன்று (11.02.2023) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட சிதைவு
விபத்தில் மூளையில் ஏற்பட்ட சிதைவு மற்றும் இரத்தக் கசிவு காரணமாக மூளையின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் மரணமடைந்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகி தலைக் கவசம் கழன்றமையினால், தலையில் பலத்த காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
