கைது செய்யப்பட்ட முத்துநகர் விவசாயிகளை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு
திருகோணமலை - சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்துநகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (30) சீனக்குடா பொலிஸ் நிலையம் முன்பாக நடத்தப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட விவசாயிகள்
முத்துநகர் பகுதி விவசாய காணியில் தனியார் நிறுவனத்தினர் பெகோ இயந்திரம் மூலமாக (27) சூரிய மின்சக்தி திட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த் தகராறு ஆரம்பமானதுடன் பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்கள் பொல்லால் விவசாயிகளை தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சீனக்குடா பொலிஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த விவசாயிகளை விடுதலை செய்ய கோரியும் பெகோ இயந்திர சாந்தவை கைது செய்யக் கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்வு கிடைக்கவில்லை
இதன்போது போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பல போராட்டங்களை நடத்தி எங்களுக்கு அழுத்து போய் விட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இம் மாதம் 30ம் திகதிக்குள் தீர்வு தருவோம் என கூறினர். அது போன்று பிரதியமைச்சர் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறியது எதுவும் நடக்கவில்லை.
பெகோ சாந்த அடியாட்களுடன் வந்து எங்கள் விவசாயிகளை தாக்கினர். பொல்லால் அடித்து தாக்கியது பெகோ சாந்த குழுவினரே.
ஆனால் எங்களை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது மதியம் 2.30 மணி தொடக்கம் மாலை ஆறுமணி வரை காத்திருந்தும் புகாரை ஏற்காது விவசாயிகளை கைது செய்தனர். பொலிஸார் நடுநிலையாக இவ்விடத்தில் செயற்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.











அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
